News April 5, 2024
உதயநிதி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்துள்ளது. மணப்பாறையில் கரூர் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பேசிய உதயநிதி, “அடுத்த 4 மாதங்களில் விடுபட்ட 40 லட்சம் பேருக்கு புதிதாக மகளிர் உரிமைத் தொகை தரப்படும்” என்று கூறினார். இவரின் இந்த உறுதி மொழி தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் தற்போது புகார் கொடுத்துள்ளனர்.
Similar News
News February 17, 2026
குரூப் ‘டி’ தேர்வு – ஆட்சியர் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) குரூப் டி எழுத்து தேர்வு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், காலை 11 மணியளவில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
News February 17, 2026
நடிகை லீலா காலமானார்.. கடைசி PHOTO

பிரபல சின்னத்திரை <<19163656>>நடிகை ராஷ்மி லீலா<<>>, பெங்களூருவில் உள்ள ஹாஸ்பிடலில் காலமானார். Pulmonary Fibrosis என்ற நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தான் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்யும்படி கடந்த சில நாள்களுக்கு முன்பு பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவரது உடலுக்கு கன்னட திரைத்துறையினர், நண்பர்கள், ரசிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP
News February 17, 2026
உலகின் பணக்கார கிராமம் இந்தியாவில் உள்ளது தெரியுமா?

குஜராத்தில் உள்ள மதாபார் என்ற கிராமம் உலகின் பணக்கார கிராமங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கிராமத்தில் 17-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளும், சுமார் ₹7,000 கோடி வங்கி வைப்புத்தொகையும் உள்ளன. இங்குள்ள குடும்பங்களில் 65% பேர் வெளிநாடுகளில் வசித்து வருவதால், அவர்கள் தங்கள் வருமானத்தை சொந்த ஊரான மதாபார் வங்கிகளில் சேமிக்கின்றனர். இதனால் இந்த ஊரில் பணம் குவிந்துள்ளது.


