News May 7, 2025
பெண்களுக்கான கட்டணமில்லா ஆங்கிலப் பேச்சு பயிற்சி

ஜாமியா கல்வி அறக்கட்டளை மற்றும் சேலம் முஸ்லிம் கல்வி சங்கம் சார்பில் அனைத்து சமுதாய பெண்களுக்கான கட்டணமில்லா ஆங்கிலப் பேச்சு பயிற்சி மே 01- ஆம் தேதி சேலம் கோட்டை ஸ்டோக்ஸ் ஹாலில் நடைபெறுகிறது. காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வகுப்புகள் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு 63826-67729, 94432-17286 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.
Similar News
News October 14, 2025
சேலம்: தொடர் வழிப்பறி குற்றவாளி மீது குண்டாஸ்

சேலம்: கிச்சிப்பாளையத்தில் கடந்த செப்.15ஆம் தேதி அருண்குமார் என்பவரிடம் கத்தியை காட்டி வழிபறி செய்த வழக்கில் கிச்சிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இதுபோன்று பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாலும் பல காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதாலும் இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார்.
News October 14, 2025
சேலத்தில் 5 பேர் மீது குண்டாஸ்!

சேலம்: வேடுகாத்தான் பட்டியில் கடந்த அக்.16ஆம் தேதி நடந்த கோயில் திருவிழா தகராறில் மோகன்ராஜ் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தங்கராஜ், இளங்கோ, சூர்யா, பிரகாஷ், கவின் ஆகிய ஐந்து பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி உத்தரவிட்டுள்ளார்.
News October 14, 2025
சேலத்தில் பட்டாசு விற்பனை தீவிரம்!

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் சேலத்தில் பட்டாசு கடைகளில் புதியவகை ரக பட்டாசுகள் விற்பனைக்கு குவித்து வருகின்றனர். மேலும், சேலம் 5 ரோடு, குரங்கு சாவடி, அழகாபுரம் , திருவா கவுண்டனூர் பைபாஸ் பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக பட்டாசு கடைகளில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.