News May 7, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல்- 30) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News October 16, 2025
வேலூர்: தீபாவளிக்கு பட்டாசு வாங்க போறீங்களா?

வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆன்லைன் மூலமாக குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக வரும் விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது எஸ்பி அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ, இலவச எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கும் படி மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது.
News October 16, 2025
வேலூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (அக்-15) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 102 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
News October 16, 2025
காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணி விவரங்கள்

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (அக்.15) இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை நடைபெறும் இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது. வேலூர், காட்பாடி, காட்பாடி, அனைகட்டு பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களின் பாதுகாப்புக்காக இரவு முழுவதும் சிறப்பு ரோந்துப் பணிகள் நடைபெறும் என காவல் துறை தெரிவித்துள்ளது.