News May 7, 2025
கோவை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கோவை, கரும்புக்கடை சேர்ந்தவர் சுமையா பானு (22). இவருக்கு திருமணம் முடிந்த பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவரது மாமனார் வீட்டில், அதிக வேலை செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று சுமையா பானு தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கை விரக்தி அடைந்த சுமையா பானு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 7, 2025
கோவையில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்!

கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஏழு மாதங்களில் 4,560 ஆன்லைன் மோசடி புகார்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இவற்றில், 350-க்கும் மேற்பட்டவை நிதி மோசடி சார்ந்த வழக்குகள் எனவும், 160-க்கும் மேற்பட்டவை பண இழப்பு சார்ந்த வழக்குகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 40-க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி புகார்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
News August 7, 2025
கோவை: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

கோவை மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <
News August 7, 2025
BREAKING கோவை: ’பரிதாபங்கள்’ சேனல் மீது புகார்!

பிரபல யுடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’மீது கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தனுஷ்கோடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அந்த சேனலில் இருந்து வெளியான ‘சொசைட்டி பாவங்கள்’வீடியோ வைரலான நிலையில், இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு குடும்ப விவகாரத்தை சமூக விவகாரமாக மாற்றுவதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை COMMENT!