News April 5, 2024

நீரிழிவு நோயாளிகள் நோன்பு இருக்கலாமா?

image

ரமலான் மாதத்தில் பல இஸ்லாமியர்கள் காலை முதல் மாலை வரை நோன்பு நோற்பார்கள். நோன்பின் போது நீரிழிவு நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரிட்டன் தொண்டு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தங்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசித்த பின்னரே நோன்பு பற்றி முடிவு செய்ய வேண்டும், என பர்மிங்காம் பல்கலைக்கழக மருத்துவ இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 25, 2026

தவெக வேட்பாளர்கள் பட்டியல்.. விஜய்யின் வியூகம்

image

தவெகவில் முதற்கட்டமாக 110 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வரும் 27-ம் தேதி விஜய் வெளியிட உள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 110 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். அதில், EX அமைச்சர்கள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் பலர் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 25, 2026

அன்று IPL-ல் Chance கிடைக்கல.. இன்று RCB ஓனர்!

image

RCB அணியின் உரிமையை <<19469065>>ஆதித்ய பிர்லா<<>> குழுமம் வாங்கியுள்ளது. அதன்படி, RCB-ன் புதிய சேர்மனாக குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆர்யமான் பிர்லா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்யமான் உள்நாட்டு கிரிக்கெட்டில் MP அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், 2018 & 2019-ம் ஆண்டுகளில், இவர் IPL-ல் RR அணியிலும் இடம்பிடித்துள்ளார். ஆனால், விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், 2019-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

News March 25, 2026

திருநங்கைகள் மீது சட்டத்தை திணிக்காதீர்: CM ஸ்டாலின்

image

ஒரு சமூகத்தின் பாதுகாப்புக்காக என்ற பெயரில் இயற்றப்படும் ஒரு சட்டத்தை, அச்சமூக மக்களே எதிர்த்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், சட்டத்தை திணிக்காமல், ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியம் என்றார். மேலும், திருநங்கையர்களுடன் கலந்துபேசி, கருத்து கேட்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!