News May 7, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு: ஸ்டாலின் கேள்வி

சாதி அடிப்படையில் எதிர்க்கட்சிகள் மக்களை பிளப்பதாக கூறி வந்த மோடி அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இது I.N.D.I.A கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை தவிர்ப்பதற்கான மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக விமர்சித்த அவர், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார்.
Similar News
News January 21, 2026
‘நான் சாகப்போறேன்.. அப்பா என்னை மன்னிச்சிரு’

‘என்னை மன்னித்து விடுங்கள்… ஐ லவ் யூ அம்மா, அப்பா’. நாசிக்கில் மாற்றுத் திறனாளி பெண்ணான திக்ஷா(21), தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கையில் எழுதிய வாசகம் இது. தங்களின் எதிர்கால நம்பிக்கையாக இருந்த மகள் இப்படி செய்துவிட்டாளே என பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். வீட்டில் தூக்கிட்டு கொண்ட திக்ஷாவின் சோக முடிவுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என உணருங்கள்.
News January 21, 2026
சற்றுமுன்: விஜய் முக்கிய முடிவு

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் ஜன.25-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவிற்கு பின், அரசியல் நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. ‘ஜன நாயகன்’ பட சென்சார் பிரச்னை, சிபிஐ விசாரணை ஆகியவை குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த விஜய், இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். இதில், தேர்தல் பணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளது.
News January 21, 2026
இன்று கவனம் பெற்ற இரு இணைப்புகள்.. யாருக்கு பலன்?

இன்று நிகழ்ந்துள்ள இரு இணைப்புகள் (திமுகவில் வைத்திலிங்கம், NDA-வில் TTV) அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. வைத்திலிங்கம் இணைந்திருப்பது ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் திமுகவுக்கு பலன் கொடுக்கும். அதேநேரம் TTV இணைந்திருப்பது தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல், டெல்டாவிலும் அதிமுகவுக்கு கூடுதல் பலமாக அமையும். 2021-ல் அமமுக பிரித்த வாக்குகளே, அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


