News May 7, 2025
நாகை: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற மே.6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 12, 2026
நாகை: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்ப போட்டி

நாகப்பட்டினத்தில் நேற்று ஜன.11 அன்று வீரத்தமிழன் சிலம்ப கலைக்கூடம் சார்பாக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், 100 சதவீத வாக்கு அளிப்பதை வலியுறுத்தி, மாணவர்களுக்கு இடையேயான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் ”எனது வாக்கு எனது எதிர்காலம் எனவே வாக்களிப்பது அவசியம்” என மாணவர்கள் வலியுறுத்தினர்.
News January 12, 2026
நாகை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது tn<
News January 12, 2026
நாகை: கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்

நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான கப்பல் போக்குவரத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் அக்டோபர் 26 முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கப்பல் போக்குவரத்து வரும் 18-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முறை அதிக பயணிகள் பயணம் செய்யும் வகையில் பெரிய கப்பல் விடப்படும் எனவும் அறிவித்துள்ளது.


