News May 7, 2025

சேலம்: கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை!

image

சேலம்: வாழப்பாடி சுக்கியம்பாளையத்தை சேர்ந்த 55 வயதான விவசாயி வடிவேல் தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், சரியான விவசாய மகசூல் இல்லாததால் கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததுள்ளார். இதையடுத்து, நிதி நிறுவனத்தின் தொந்தரவு தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News September 15, 2025

சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை திருமணம் குறித்து பொதுமக்களுக்கு கருத்துரை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், நாட்டிலேயே குழந்தைகள் திருமணம் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பெண்களுக்கு திருமண வயது 18 என அரசு நிர்ணயித்துள்ளது. இருப்பினும் சிலர் 18 வயதிற்கு கீழ் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். எனவே குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 15, 2025

சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<> கிளிக்<<>> செய்து சேலம் மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 15, 2025

சேலம் மாநகர காவல்துறை எச்சரிக்கை!

image

சேலம் சிட்டி போலீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் ஆப்ஸ் மூலம் வரும் APK கோப்புகளை பதிவிறக்க வேண்டாம், என அறிவுறுத்தியுள்ளது. அவை மால்வேர் கொண்டு உங்கள் கைபேசியை பாதித்து தனிப்பட்ட தகவல்களை திருடும் அபாயம் உள்ளது. நம்பகமான மூலங்களில் இருந்து மட்டுமே ஆப்ஸ் பதிவிறக்கவும். புகார் பதிவு செய்ய www.cybercrime.gov.in பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!