News May 7, 2025
IPL: CSK முதலில் பேட்டிங்

சென்னையில் நடைபெறும் இன்றைய IPL போட்டியில், CSK – PBKS அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸை வென்ற PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்துள்ளார். புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் PBKS அணி, முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும் முனைப்போடு களம் இறங்கவுள்ளது. அதேநேரம், ஆறுதல் வெற்றிகளை பெற CSK முயற்சித்து வருகிறது.
Similar News
News December 2, 2025
டெல்லி விரைந்த OPS… புதுக்கட்சி தொடக்கமா?

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க EPS-க்கு 15-ம் தேதி வரை OPS கெடு விதித்திருந்தார். இதனிடையே அவர் தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது தவெகவுடன் இணைவாரா என்ற கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் டெல்லிக்கு இன்று OPS அவசர பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதுவரை பாஜக தலைவர்களை சந்திக்க அவர் நேரம் எதுவும் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் புதிய கட்சியை பதிவு செய்யவே டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
News December 2, 2025
5 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

தொடர் மழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(டிச.3) பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூரில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், பல மாவட்டங்களில் மழை தொடர்வதால், அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே, தி.மலை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது.
News December 2, 2025
CINEMA 360°: ‘வா வாத்தியார்’ ரிலீஸ் தேதி மாற்றம்

*மோகன் லாலின் ‘திரிஷ்யம் – 3’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. *கார்த்தியின் வா வாத்தியார் படம் வருகிற 5-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், அது டிச.12 தேதிக்கு தள்ளிப்போயுள்ளது. *விமல் நடித்துள்ள ‘மகாசேனா’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. *‘அங்கம்மாள்’ படத்தில் இருந்து ‘செண்டிப்பூவா’ பாடல் வெளியாகி உள்ளது.


