News May 7, 2025

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

Similar News

News January 12, 2026

தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.12) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.26, கத்தரிக்காய்: ரூ.15, வெண்டைக்காய்: ரூ.36, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.24, கொத்தவரை: ரூ.50, பச்சைமிளகாய்: ரூ.25, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன

News January 12, 2026

தருமபுரியில் மின்தடை; உங்க எரிய இருக்கா?

image

தருமபுரி மாவட்டம் பொம்மிடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக நாளை (ஜன.13) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்க்கண்ட பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், ஒட்டுப்பட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, வே.முத்தம்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

News January 12, 2026

தருமபுரியில் துடிதுடித்து பலி

image

அரூர், மேல் பாட்ஷாபேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ஹமீது (55). ஆட்டோவில் 2 பயணிகளுடன் மொரப்பூர்-கல்லாவி ரோட்டில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அப்துல் ஹமீது பலத்த காயம் அடைந்தார். பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்துல் ஹமீது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!