News May 7, 2025
இந்தியாவின் பதிலடி எப்படி இருக்கும்? (2/2)

இந்தியா-பாக் இடையே முழு அளவிலான போர் ஆபத்தானது. அதேநேரம், பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். இந்நிலையில் 2-வது வழியையே PM மோடி தேர்ந்தெடுப்பார் எனத் தெரிகிறது. அதன்படி, பயங்கரவாத முகாம்களை அழிக்கும் துல்லிய தாக்குதல்கள், பாக்.,க்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 23, 2025
ரயில்வேயில் 2,570 பணிகள்: ₹38,400 வரை சம்பளம்

ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் 2,570 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்ஜினியரிங் (அ) டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் வயது 18-ல் இருந்து 33-க்குள் இருந்தால் வரும் அக்.31 – நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹29,300 – ₹38,400 வரை கிடைக்கும். இதுதொடர்பான முழுவிபரங்கள் அறிய <
News October 23, 2025
நெஞ்சு சளியை வெளியேற்றும் கசாயம் இதோ!

நுரையீரலில் தேங்கியுள்ள சளியை கரைத்து வெளியேற்ற இந்த கசாயம் போதும். முதலில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் சுட வைக்க வேண்டும். அதில் கிராம்பு, மிளகு, ப்ளாக் சால்ட், சுக்கு பவுடர், ஓமம், வெல்லத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து, பாதியாக சுண்டியதும், அதை இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இதனால் நெஞ்சு சளி, மூக்கடைப்பு, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
News October 23, 2025
மின்சார கார்களின் விற்பனை அமோகம்

கடந்த ஆண்டு செப்டம்பரை ஒப்பிடும்போது நடப்பாண்டு மின்சார கார்களின் மொத்த விற்பனை 6,216-ல் இருந்து 15,329-ஆக அதிகரித்துள்ளன. டாடா மோட்டார்ஸ் கார்களின் விற்பனை 62% அதிகரித்து 6,216 கார்கள் விற்றுள்ளன. அதேபோல் JSW MG MOTORS 3,912, மஹிந்திரா நிறுவனம் 3,243, BYD இந்தியா 547, கியா இந்தியா 506, ஹிண்டாய் மோட்டார் 349, BMW இந்தியா 310, பென்ஸ் இந்தியா 97 கார்களையும் விற்பனை செய்துள்ளன.