News May 7, 2025

பாலியல் புகாரில் பேராசிரியர் மீது வழக்கு பதிவு

image

நெல்லை மாவட்டம் அபிஷேக பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக துணைவேந்தரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதனை விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்பட்டது. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பேராசிரியர் கண்ணன் மீது நெல்லை காவல் நிலையத்தில் இரு பிரிவின் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Similar News

News December 31, 2025

நெல்லை: சத்துணவு திட்டத்தில் சமையல் உதவியாளர் பணி

image

நெல்லை மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 15 சமையல் உதவியாளர் பின்னடைவு காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் தகுதியான பெண்களை நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பெண்கள் ஜன.3 முதல் https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News December 31, 2025

நெல்லை: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

நெல்லை: 359 பேர் போக்சோவில் கைது!

image

நெல்லை மாவட்டத்தில் எஸ்.பி சிலம்பரசன் உத்தரவிபேரில், இந்த ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம்; மாவட்டத்தில் குழந்தை திருமணம் உள்ளிட்டு 235 போக்சோ வழக்குகளும், மாநகரில் 74 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 359 பேர் மீது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!