News May 7, 2025

தென்காசி மாவட்ட அணைகள் நீர் இருப்பு நிலவரம்

image

தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 47 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 2 கன அடி நீர் வருகிறது. 18 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 51 அடி. 4 கன அடி நீர் வருகிறது. 10 கண அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி நீர் இருப்பு 24 அடி. நீர் வரத்து இல்லை குண்டாறு அணை நீர் இருப்பு 23 அடி. அடவிநாயனார் அணை நீர் இருப்பு 21 அடியாக உள்ளது.

Similar News

News January 12, 2026

தென்காசி: கேரளாவில் இருந்து தடைசெய்யபட்ட பொருள் கடத்தல்

image

கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்காசி மாவட்டம் புளியரை வழியாக 34 கிலோ புகையிலைப் பொருட்கள் கொண்டு வந்த ஆய்க்குடி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும் தென்மலை பகுதியை சேர்ந்த ஜோபின் ஜாய் என்பவரும் புளியறையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் புகையிலை பொருட்களோடு பிடிபட்டனர். போலீசார் கைது செய்து விசாரணை.

News January 12, 2026

தென்காசியில் ஒரே நாளில் 8 பேர் G.Hல் அனுமதி!

image

தென்காசி, திருவேங்கடம் அருகே குறிஞ்சாக்குளம் பகுதியில் நேற்று மாலை வெறிநாய் கடித்ததில் முத்துலட்சுமி, பத்மபிரியா உட்பட 5 பேர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 3 பேர் முதலுதவி பெற்று வீடு திரும்பினர். ஒரே நாளில் 8 பேரை கடித்து குதறிய தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 12, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100  தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!