News May 7, 2025
மயிலாடுதுறையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

மயிலாடுதுறையில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் உள்ள Loan Processing Officer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே<
Similar News
News August 22, 2025
மயிலாடுதுறையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவர அறிக்கை அசல் கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 22, 2025
மயிலாடுதுறை: தந்தையை கொலை செய்த மகன்

செம்பனார்கோயில் காவல் சரகம் மேலபாதி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குடும்பத் தகராறில் அவரது மகனே அவரை கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து செம்பனார்கோயில் போலீசார் சிவகுமாரின் மகன் அபினேஷ் (25) என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.
News August 22, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.