News May 7, 2025
காசு இல்லையா.. இன்று இந்த ‘Gold’ வாங்கிக்கோங்க!

இப்போது இருக்கும் விலைக்கு நாம் எப்படி தங்கம் வாங்குறது என அட்சய திருதியையில் வருத்தமாக இருக்கிறீர்களா? கவலைய விடுங்க பாஸு. இந்த கோல்டை வாங்கிக்கோங்க. யாரோ ஒரு கடைக்காரர், வியாபாரத்திற்காக யோசிச்சி பலரையும் மனமகிழ வைத்துள்ளார். Marry Gold, AVT Gold, Chakra Gold, MSS Gold இந்த கோல்டை இன்று வாங்கிக்கோங்க. இதுவும் கோல்ட் தானே சார்!
Similar News
News October 31, 2025
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பெண்களின் சடலம் எண்ணூரில் மீட்பு

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சார்ந்த தேவகி(30), தேர் வழியை சேர்ந்த காயத்ரி(18), தேவம்பேட்டை சேர்ந்த பவானி (19), எளாவூரை சேர்ந்த ஷாலினி(18) இன்று மின்சார ரயில் சென்னைக்கு சென்றனர். இந்நிலையில் 4 பேரின் சடலம் சென்னை எண்ணூர் கடற்கரை ஓரத்தில் மீட்கப்பட்டுள்ளது. 4 பேரும் எதனால் இறந்தார் என இதுவரை தெரியாத நிலையில் இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 31, 2025
ஜெமிமா எனும் ஸ்டார்.. அன்றே கணித்த பிரபலம்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்து 7 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து EX வீரர் நாசர் ஹூசைன் பதிவிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு வந்த போது ஜெமிமாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட நாசர் ஹூசைன், அவருக்கு சில பந்துகளை வீசியதாக கூறியுள்ளார். அவர் எதிர்காலத்தில் இந்திய அணியின் ஸ்டாராக உருவெடுப்பார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொன்னது போலவே தற்போது நடந்துள்ளது.
News October 31, 2025
பிரபல நடிகர் தர்மேந்திரா ஹாஸ்பிடலில் அனுமதி

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்த பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா(89) மும்பையில் உள்ள ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். அவருக்கு எந்தவித உடல்நலப் பிரச்னைகளும் இல்லை என குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். வயது முதிர்வு காரணமாக, சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவே தர்மேந்திராவை ஹாஸ்பிடலில் சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடிகை ஹேம மாலினியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


