News May 7, 2025

வேலூர்: அடிப்படை பிரச்சனையா கவலை வேண்டாம்!

image

வேலூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News January 19, 2026

வேலூர்: பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

வேலூர் CMC டாக்டரால் அவலம்!

image

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் பெல்கிங் என்பவருக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் தொடர்பு இருக்கலாம் என 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ந் தேதி வேலூருக்கு விசாரணைக்காக வந்தனர். அப்போது இவரது அறையிலிருந்து 36 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விடுமுறையில் பெங்களூரு சென்ற பெல்கிங் தலைமறைவானார். தற்போது போலீசார் பெல்கிங்கை தேடி வருகின்றனர்.

News January 19, 2026

வேலூர்: கணவன் கண் முன்னே கர்ப்பிணி மனைவி பலி!

image

கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் தினகரன் (29). இவரது 3 மாத கர்பிணி மனைவி தீபிகா (22). இவர்கள் நேற்று (ஜன.18) வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கிங்கினி அம்மன் கோவில் அருகே பின்னால் வந்த கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தினகரன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!