News May 7, 2025
நாகை மக்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்

கோடைகாலம் நெருங்கும் நிலையில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் உங்கள் பகுதிகளில் ஏற்பட்டால் மின்சாரம் தொடர்பாக அறிந்து கொள்ள இந்த எண்ணை தொர்புகொள்ளுங்கள். ▶நிர்வாக பொறியாளர் (SE), நாகப்பட்டினம்-04365-224878. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
Similar News
News November 5, 2025
விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.256.67 கோடி வரவு வைப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 03.09.2025 முதல் 04.11.2025 வரை 23,146 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூ.256.67 கோடி அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து கொள்முதல் பணிகள் முழுவடிவம் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
நாகை எஸ்.பி அலுவலகத்தில் 17 மனுக்களை பெற்ற எஸ்.பி

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், எஸ்பி சு. செல்வகுமார் பொதுமக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து 17 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு மனுக்களை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.
News November 5, 2025
நாகை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

நாகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


