News May 7, 2025
குடிநீர் பிரச்சனையா? கவலை வேண்டாம்

கோடை காலம் தொடங்கி உள்ளதால் விழுப்புரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார் அளிப்பதற்கான புகார் எண் 044 -4567 4567 ஆகும். மேலும், கட்டணமில்லா எண் 1916 மூலம் புகார் தெரிவிக்கலாம். ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க 155340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 13, 2025
சுதந்திர தினம்: மாவட்ட ஆட்சியர் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர்களால் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டுகொண்டுள்ளார்.
News August 13, 2025
விசை தெளிப்பான் வழங்கிய ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், கோவில்புரையூர் ஊராட்சியில் நடைபெற்றுவரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், வேளாண்மைத்துறை சார்பில், விவசாயிக்கு விசை தெளிப்பானை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று வழங்கினார். உடன் மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் தனலட்சுமி உட்பட பலர் உள்ளனர்.
News August 13, 2025
திண்டிவனம் – வாலாஜா இடையே புதிய ரயில் பாதை

திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா வரை சுமார் 180 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை திட்டம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதை மூலம் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய நகரங்கள் ரயில் மூலம் இணைவதால் பல்வேறு நன்மைகள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.