News May 7, 2025
டெல்லி அரசியலை நோக்கி நகரும் பிடிஆர்?

சமீபமாக அதிருப்தியில் இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை டெல்லிக்கு அனுப்ப CM ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தேசிய ஊடகங்களுக்கு பிடிஆர் அளித்த பேட்டிகள் புயலை கிளப்பின. எனவே, பிடிஆர் தேசிய அரசியலுக்கு சரியாக இருப்பார் என CM நினைக்கிறாராம். ராஜ்யசபா எம்பி பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்கிறார்கள். நீங்க சொல்லுங்க பிடிஆர் டெல்லி போகணுமா?
Similar News
News January 9, 2026
திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

மாணிக்கம் தாகூர் X தள பதிவு, திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 தேர்தலில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக MLA-களின் பட்டியலை வெளியிட்டு, அரசவை கவிஞர்களும், ஐடி விங் மகான்களுக்கும் நல்ல பாடம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, கூட்டணி இல்லாமல், திமுக தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பதை மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 9, 2026
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

தமிழகத்தில் இம்மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினமான ஜன.16, குடியரசு தினமான ஜன.26 ஆகிய தேதிகளில் அனைத்து டாஸ்மாக் கடைகள், அனைத்து வகையான பார்களை கட்டாயம் மூட வேண்டும். இந்த நாள்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News January 9, 2026
திமுக இல்லாத தமிழகமே மக்களின் கனவு: நயினார்

<<18807425>>’உங்கள் கனவை சொல்லுங்க’<<>> திட்டத்தை விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன், தமிழக மக்களின் கனவுகள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், சீரான சட்டம் ஒழுங்கு, திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், பாதுகாப்பான தமிழகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் முன்வைத்துள்ளார். மேலும், முக்கியமாக திமுக இல்லாத தமிழகமே, TN மக்களின் கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


