News April 30, 2025
அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியாக பேசவேண்டும் என்று சிறுமியை அழைத்த அறிவியல் ஆசிரியர் மோகன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட மற்றொரு ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், ஆசிரியர் மோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
Similar News
News August 24, 2025
சென்னை வாசிகளுக்கு முக்கிய எண்கள்

சென்னையில் தற்போது கன மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதியில் மின்தடை, மின்னழுத்த பிரச்சனை, மின்கம்பம் சேதம் ஆகிறது. இதுகுறித்து புகார் அளிப்பதற்கு “94987-94987” என்ற எண்ணை அழைக்கலாம். அல்லது “94458-50811” என்ற எண்ணுக்கு முகவரி, புகைப்படத்துடன் What’s App பண்ணலாம். இது போன்ற முக்கிய தகவல்களை மக்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 24, 2025
சென்னை கலெக்டர் அறிவிப்பு

பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் ஒரு பெற்றோரால் கைவிடப்பட்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்பு கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
News August 24, 2025
சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 75 இடங்களில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு கருவிகளை பொருத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ‘IoT-based environmental sensors’ என்ற கருவி மூலம், வெப்பம், ஈரப்பதம், மாசு அளவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். இது நடைமுறைக்கு வந்தால் இந்தியாவிலேயே இத்தகைய கருவிகள் பொருத்தும் முதல் நகரமாக சென்னை மாறும் என கூறப்படுகிறது.