News April 30, 2025
100 நாள்கள்.. 200 வழக்குகள்..!

USA அதிபராக டிரம்ப் பதவியேற்று 100 நாள்கள் கழிந்துள்ளன. இந்த காலகட்டத்தில் அவர் மீது 200 வழக்குகள் பதிவாகியுள்ளன. குடியுரிமை, பிற நாடுகளுடன் வரி, வர்த்தக போர் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல், உக்ரைன் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், போர் ஓய்ந்தபாடில்லை. USA-வின் அரசியல் பிறநாடுகளில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால், அவரது ஆட்சிக்கு நீங்கள் போடும் மார்க் என்ன?
Similar News
News November 8, 2025
மாதம் மாதம் ₹11,000 கிடைக்கும் அசத்தல் திட்டம்!

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மாதம் மாதம் ₹11,000 வரை வழங்குகிறது. இத்திட்டத்தில், ₹15 லட்சத்தை முதலீடு செய்தால், 8.2% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ₹1,23,000 வட்டியாக கிடைக்கும். இதை 12 மாதங்களாகப் பிரித்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ₹11,750 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் சேரலாம். அருகில் இருக்கு போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.
News November 8, 2025
விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ‘வார் ரூம்’

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தவெக தலைவர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வார் ரூம் மூலம் தவெக மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளின் பணிகளை தினமும் விஜய் நேரடியாகவே கண்காணிப்பார் என்றும் மண்டல பொறுப்பாளர்கள் விஜய்க்கு நேரடியாக ரிப்போர்ட் செய்யும் வகையிலும் வார் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News November 8, 2025
நடிகை கௌரி கிஷனிடம் மன்னிப்பு கேட்டார்

நடிகை கௌரி கிஷனை உருவக்கேலி செய்த குற்றச்சாட்டில் யூடியூபர் கார்த்திக் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், காயப்பட்டிருந்தால் Sorry எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ‘தன்னுடைய கேள்வி தவறு’ என கூறாமல் இன்னமும் ‘தவறாக புரிந்துகொள்ளப்பட்டது’ என யூடியூபர் கூறுவதால் சரியான முறையில் மன்னிப்பு கேட்கவில்லை என பலரும் சாடி வருகின்றனர்.


