News April 30, 2025
இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது

சேலம் அருகே எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(21). சீலநாயக்கன்பட்டியில் உள்ள பழைய இரும்பு கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 27-ஆம் தேதி, ஏரிக்கரையில் 4 பேர் சூர்யாவுடன் தகராறில் ஈடுபட்டதுடன், பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் மதன், குரு, பிரசாத் உள்ளிட்ட 4 பேரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News September 15, 2025
சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை திருமணம் குறித்து பொதுமக்களுக்கு கருத்துரை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், நாட்டிலேயே குழந்தைகள் திருமணம் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பெண்களுக்கு திருமண வயது 18 என அரசு நிர்ணயித்துள்ளது. இருப்பினும் சிலர் 18 வயதிற்கு கீழ் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். எனவே குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 15, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<
News September 15, 2025
சேலம் மாநகர காவல்துறை எச்சரிக்கை!

சேலம் சிட்டி போலீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் ஆப்ஸ் மூலம் வரும் APK கோப்புகளை பதிவிறக்க வேண்டாம், என அறிவுறுத்தியுள்ளது. அவை மால்வேர் கொண்டு உங்கள் கைபேசியை பாதித்து தனிப்பட்ட தகவல்களை திருடும் அபாயம் உள்ளது. நம்பகமான மூலங்களில் இருந்து மட்டுமே ஆப்ஸ் பதிவிறக்கவும். புகார் பதிவு செய்ய www.cybercrime.gov.in பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.