News April 30, 2025
மே 29-ல் வரலாறு படைக்கும் இந்தியர்!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வரும் மே 29-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் SpaceX Felcon ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளார். Axiom 4 என்ற தனியார் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.
Similar News
News December 26, 2025
பாமகவின் தளபதி GK மணிக்கு வந்த சோதனை (2/2)

1998-ல் பாமகவின் தலைவராக தேர்வான GKM, 2022-ல் கௌரவ தலைவரானார். கட்சிக்குள் வளர்த்த செல்வாக்கு மட்டுமின்றி, ஜெ., கலைஞருக்கு கூட நெருக்கமானவராக மாறினார். அரசியலில் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்ற இவர் 1996, 2001, 2006 2021 தேர்தல்களில் வென்றார். ராமதாஸ் இட்ட பணியை தட்டாமல் செய்து பாமகவின் தளபதியாக திகழ்ந்த மணியை தற்போது அன்புமணி கட்சியிலிருந்து <<18674410>>நீக்கியிருக்கிறார்<<>>.
News December 26, 2025
ஜன.20-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20-ல் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். கவர்னர் ஒப்புதலுடன் காலை 9:30 மணிக்கு பேரவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு தயாரித்து வழங்கும் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்கவுள்ளார். அன்றே சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என்றும் அப்பாவு கூறியுள்ளார்.
News December 26, 2025
அஜிதா விவகாரத்தில் விஜய் செய்ய தவறியது: தமிழிசை

பெண்களுக்கு அரசியல் என்பது எப்போதும் ஒரு போராட்டமாகவே இருக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தவெக நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்றதை பற்றி பேசிய அவர், விஜய் முன்னதாகவே அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும் என பேசியுள்ளார். மேலும், அஜிதா தற்கொலைக்கு முயன்றது கவலையளிப்பதாகவும் அவரது போராட்டம் வெற்றியடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


