News April 30, 2025
PAK-கிற்கு பதிலடி? இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கும் PM மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், PAK-கிற்கு எதிராக ராணுவ பதிலடி உள்பட முக்கிய விஷயங்கள் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த 23-ம் தேதி கூடிய பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், சிந்து நதி நீர் நிறுத்தம் உள்பட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
Similar News
News April 30, 2025
இன்று தங்கம் வாங்க முடியாதவங்க இத பண்ணுங்க!

அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமல்ல, எந்த பொருளை வாங்கினாலும், மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதே போல, நீங்கள் செய்ய விரும்பும் ஒரு காரியத்தையும் இன்று தொடங்கினால், அது வெற்றியில் முடியும் எனப்படுகிறது.
அரை கிலோ அரிசியை வாங்கி சிலருக்கு தானமாக வழங்கலாம். ஒரு வேளை உணவாவது மற்றவர்களுக்கு வாங்கி தரலாம். இதன்மூலம் நல்ல வளர்ச்சியும், மகாலட்சுமி அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் விலையில் மாற்றமில்லை!

அட்சய திருதியையொட்டி தங்கம் விலை இன்று உயர்வை சந்திக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், தங்கம் விலையில் மாற்றமில்லை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,980-க்கும், சவரன் ₹71,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியை பொறுத்தவரையில் 1 கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 விலை உயர்ந்தது கவனிக்கத்தக்கது.
News April 30, 2025
தேமுதிக பொதுக்குழு இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல், கூட்டணி விவகாரம் குறித்தும் அறிவிப்பு வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.