News April 30, 2025
சென்னை வரும் அமித்ஷா.. பாஜகவுக்கு 40 சீட்?

சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தார். இந்நிலையில் மே 3-ல் மீண்டும் அவர் சென்னை வரவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் செயல்பாடு, தொகுதி பங்கீட்டில் 40 சீட் வரை அதிமுகவிடம் கேட்பது குறித்தும், திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News November 11, 2025
ஷமிக்கு ஆதரவாக களமிறங்கிய கங்குலி

AUS, SA அணிகளுக்கு எதிரான போட்டிகளில், இந்திய அணியில் ஷமி இடம்பெறாதது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஷமியை அணியில் இருந்து விலக்கி வைக்க, எந்த காரணத்தையும் தன்னால் கண்டறிய முடியவில்லை என கங்குலி தெரிவித்துள்ளார். ரஞ்சி டிராபியில் ஷமி சிறப்பாக விளையாடி வருவதாகவும், தேர்வுக்குழு நிச்சயம் அதை பார்த்திருக்கும் என்றும் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 11, 2025
பிஹாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல்

பிஹாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, அம்மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் 20 மாவட்டங்களில் மொத்தம் 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
News November 11, 2025
International Roundup: அமெரிக்க அரசு முடக்கத்திற்கு தீர்வு

*அமெரிக்க அரசு முடக்கம் இந்த வார இறுதிக்குள் சீராகும் என எதிர்பார்ப்பு. *சிரிய அதிபர் அகமது அல் ஷாரா – அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை. *பிலிப்பைன்ஸை தாக்கிய Fung-wong புயலால் 4 பேர் பலி. *காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி. *ஊழல் வழக்கில் சிறையில் இருந்த ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி விடுவிப்பு. *ஈராக்கில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.


