News April 29, 2025
ட்ரம்ப் எதிர்ப்பால் வென்ற மார்க் கார்னி

கனடா பொதுத் தேர்தலில் மார்க் கார்னி வெற்றி பெற்றதற்கு, அவருடைய தீவிர ட்ரம்ப் எதிர்ப்பே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, கனடாவை USA-வின் மாகாணம் என்றும் அன்றைய PM ட்ரூடோவை கவர்னர் என்றும் அழைத்தார். ட்ரம்ப்பின் இந்த பெரியண்ணன் மனப்பான்மையை பெரும்பாலான கனடியர்கள் விரும்பவில்லை என்பது தேர்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளது. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா ட்ரம்ப்?
Similar News
News October 30, 2025
BREAKING: பசும்பொன்னில் அரசியல் திருப்பம்

தேவர் குருபூஜை நாளான இன்று அரசியல் ரீதியாக அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. பசும்பொன்னில் EPS-க்கு எதிராக டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றாக இணைந்தனர். இச்சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே சீமானை தோளில் கைப்போட்டு வைகோ அழைத்து வந்தார். மதிமுகவினரும், நாதகவினரும் மோதி வந்தனர். தற்போது இருவரும் இணக்கமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
News October 30, 2025
சீனாவும் USA-வும் கூட்டாளிகள்: ஜி ஜின்பிங்

சீனாவும் USA-வும் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் வலுவாக இருக்கும் 2 நாடுகளுக்கிடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்புதான். இருந்தாலும் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்க டிரம்ப்புடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். மேலும், உலக அமைதி பற்றி டிரம்ப் அக்கறையுடன் உள்ளதாகவும் புகழ்ந்துள்ளார்.
News October 30, 2025
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா: CM ஸ்டாலின்

முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், CM ஸ்டாலின் மரியாதை செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற EPS-ன் கோரிக்கையை தானும் வழிமொழிவதாக குறிப்பிட்டார். மேலும், முத்துராமலிங்க தேவர் பெயரில் ₹3 கோடி செலவில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்றும் CM ஸ்டாலின் அறிவித்தார்.


