News April 29, 2025

அதே மணம்.. பூஜா ஹெக்டே கிளாஸிக் லுக்

image

சமீபமாக, பூஜா ஹெக்டேவின் சேலை கலெக்‌சன் எனச் சொல்லும் அளவிற்கு அவரது போட்டோஷூட் இருக்கிறது. அந்த வகையில், தனது பாட்டியின் 70 வருட பழமையான காஞ்சிபுரம் சேலையை அணிந்தவாறு, அதன் மணத்தால் அந்த காலத்துக்கே சென்றதாக பூஜா பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். பூஜாவின் நடிப்பில் ரெட்ரோ படம் மே 1-ல் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார்.

Similar News

News November 9, 2025

ஐபிஎல் 2026: வீரர்களை தக்கவைக்க கெடுவிதிப்பு

image

ஐபிஎல் 2026 சீசனுக்காக தக்கவைத்த வீரர்களின் விவரத்தை வரும் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அணி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய நாளிலேயே டிரேடிங் செய்யப்பட்ட வீரர்களின் விவரமும் வெளியாகவுள்ளது. விடுவிக்கப்படும் வீரர்களின் தொகை, அணிகளின் ஏலத் தொகையுடன் சேர்க்கப்படும். அதை தொடர்ந்து டிசம்பரில் வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. CSK யாரை தக்கவைக்கனும்னு நீங்க நினைக்கிறீங்க?

News November 9, 2025

SIR படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி?

image

2026 தேர்தலை முன்னிட்டு நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக, SIR படிவத்தை நாம் பூர்த்தி செய்வது அவசியமாகும். இதில் என்னென்ன விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கும்? என சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் SIR கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர்கள் வழங்க வேண்டிய விவரங்கள் குறித்து, போட்டோக்களுடன் கூடிய எளிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.

News November 9, 2025

பிக்பாஸில் இரட்டை எவிக்‌ஷன்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்

image

BB தமிழ் சீசன் 9-ல் முதல் முறையாக ஒரே வாரத்தில் 2 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் ரம்யாவும், துஷாரும் எவிக்ட் ஆனதாக தகவல் பரவியது. தற்போது, துஷாரும், பிரவீன் ராஜ்தேவும் எலிமினேட் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. பிரவீன் ராஜ்தேவ் அன்அபிசியல் வாக்குப்பதிவில் லீடிங்கில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் எப்படி எவிக்ட் ஆனார் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

error: Content is protected !!