News April 29, 2025
விழுப்புரமும் நடிகர் திலகமும்

வரலாற்று சிறப்பு மிக்க விழுப்புரம் மாவட்டம் பல முக்கிய மனிதர்களை தந்துள்ளது. அதில் முக்கியமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் பூர்விகம் சூரக்கோட்டை என்பதில் என்ற மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவர் பிறந்தது என்னவோ விழுப்புரத்தில் தான். சிவாஜி நடிகரான பின்பு அவருக்கான பிறப்பு சான்றிதழை விழா ஒன்றில் விழுப்புரம் நகராட்சி அவருக்கு வழங்கியது குறிப்பிடதக்கது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 26, 2025
விழுப்புரம்: முதல்வரை வரவேற்ற மாவட்ட செயலாளர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க எல்லையில் தெற்கு மாவட்ட செயலாளர் கௌதமசிகாமணி இன்று(டிச.26) வரவேற்றார்.
உடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் சலாம், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News December 26, 2025
விழுப்புரம்: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 26, 2025
விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் 2026 வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெறுகிறது. டிச.27, ஜன.03 (சனி) மற்றும் டிச.28, ஜன.04 (ஞாயிறு) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெறவுள்ளது. புதிய சேர்ப்பு, திருத்தம், நீக்கம் செய்ய பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.


