News April 29, 2025

சென்னை கலெக்டர் எச்சரிக்கை அறிவிப்பு

image

சென்னை: கனிமங்கள் கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு இனிமேல் e-அனுமதி கட்டாயம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் சகதே அறிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட கட்டட வேலைகளில் கிடைக்கும் கனிமங்களை அனுமதி இல்லாமல் கடத்தினால், வாகன உரிமையாளர், டிரைவர் மற்றும் நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Similar News

News August 16, 2025

பள்ளி மாணவிக்கு கத்திகுத்து

image

சென்னை பல்லாவரத்தில் இன்று 9ம் வகுப்பு மாணவியை கத்தியால் வெட்டிவிட்டு
கழுத்தை அறுத்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் திருவண்ணாமலையை சேர்ந்த செல்வம் மீது போக்சோ வழக்குபதிவு செய்து பல்லாவரம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 16, 2025

சென்னையின் முதல் ரயில்வே ஸ்டேஷன்

image

தென்னிந்தியாவின் முதல் ரயில்நிலையம் நம்ம வடசென்னை ராயபுரத்தில் தான் அமைக்கப்பட்டது. 1856ம் ஆண்டு கட்டப்பட்ட ராயபுரம் ரயில்நிலையத்தில் இருந்து முதல் ரயில் வாலாஜா பேட்டை வரை இயக்கப்பட்டது. இன்றைய வளர்ச்சி அடைந்த சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களாக சென்ட்ரல், எழும்பூர் உள்ள நிலையில், இந்தியாவின் பழமை வாய்ந்த ரயில் நிலையமாக ராயபுரம் உள்ளது. ஷேர் பண்ணுங்க

News August 16, 2025

களை கட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை

image

விநாயகர் சதுர்த்தி ஆக-27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் எழும்பூர், மயிலாப்பூர், கோயம்பேடு,தி.நகர், வேளச்சேரி, கொசப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், விதவிதமான விநாயகர் சிலைகள் பக்தர்கள் மனம் கவரும் வகையில், பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை, சதுர்த்தி நாளுக்காக பூஜை செய்ய, பக்தர்கள் பலரும் வாங்கி செல்கின்றனர்.

error: Content is protected !!