News April 29, 2025
BREAKING: இந்தியா த்ரில் வெற்றி

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான ODI-ல், இந்திய மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. IND-SL-SA இடையிலான முத்தரப்பு ODI தொடர் இலங்கையில் நடந்துவருகிறது. முதல் ஆட்டத்தில் SL-ஐ வீழ்த்திய IND, இன்று நடந்த 2-வது ஆட்டத்தில் 50 ஓவர்களில் 276/6 ரன்கள் குவித்தது. பிரதிகா ராவல் 78 ரன்கள் குவித்தார். 277 ரன் இலக்கை விரட்டிய SA, 261 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.
Similar News
News April 30, 2025
இவரால கூட இலவச கல்வி கொடுக்க முடியல!

மெட்டா CEO மார்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா ஆகியோரின் தொடக்கப்பள்ளி அடுத்த ஆண்டு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க, கலிஃபோர்னியாவில் கடந்த 2016-ல் இப்பள்ளி தொடங்கப்பட்டது. இது மிகவும் கடினமான முடிவு எனவும், குழந்தைகளை மற்ற பள்ளிக்கு மாற்ற உதவி செய்வோம் எனவும் தம்பதி தெரிவித்துள்ளனர். இருப்பினும் மூடப்படுவதற்கான காரணத்தை அவர்கள் அறிவிக்கவில்லை.
News April 30, 2025
மே 29-ல் வரலாறு படைக்கும் இந்தியர்!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வரும் மே 29-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் SpaceX Felcon ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளார். Axiom 4 என்ற தனியார் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.
News April 30, 2025
இந்தியாவில் வேகமெடுக்கும் ஐபோன் உற்பத்தி

ஒசூரில் புதிதாக அமைக்கப்பட்ட டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் பழைய ஐபோன் மாடல்களின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல், பெங்களூருவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில், புதிய ஐபோன் 16 மாடல்களின் உற்பத்தி விரைவில் தொடங்கப்பட உள்ளன. சீன இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்த நிலையில், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.