News April 29, 2025
தகிக்கும் கோடையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் உங்களது உடல்நலனை காக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. *நாள்தோறும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் அருந்துதல். *உச்சி வெயிலில் (காலை 11 – மாலை 3) வரை தேவையின்றி வெளியே செல்லாமல் இருங்கள். *உடல் வெப்பநிலையைத் தணிக்க இருமுறை குளியுங்கள்.* பருத்தி ஆடைகளை அணியுங்கள்.* எண்ணெய், கொழுப்பு உணவுகளைத் தவிருங்கள். *செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும். SHARE IT.
Similar News
News November 3, 2025
நாளை பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

பொதுத்தேர்வு தேதி எப்போது வெளியிடப்படும் என 10, +2 மாணவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி நாளை வெளியாகிறது. பொதுத்தேர்வு தேதியை அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 10, +2, கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை அவர் அறிவிக்க உள்ளார். என்ன மாணவர்களே, ரெடியா!
News November 3, 2025
Worldcup நாயகிகளுக்கு வைர நெக்லஸ் பரிசு

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினருக்கு, குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், MP-யுமான கோவிந்த் தோலாகியா சிறப்பு பரிசுகளை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் BCCI-க்கு எழுதிய கடிதத்தில், இந்திய அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் வைர நெக்லஸ்களை பரிசளிக்கவும், அவர்களின் வீடுகளில் சோலார் பேனல்களை பொருத்தவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
விருதுகளை அள்ளிக்குவித்த மஞ்சும்மல் பாய்ஸ்

2024ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர் (சிதம்பரம்), சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் (சௌபின் ஷாஹிர்) , சிறந்த கலை இயக்குனர், சிறந்த பாடலாசிரியர் (வேடன்), சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த Sound Design மற்றும் Sound Mixing ஆகிய 9 விருதுகளை வென்றுள்ளது.


