News April 29, 2025
தர்மபுரியில் அரசு வேலை; நாளை கடைசி நாள்

தர்மபுரி அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்படவுள்ளன். இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News August 6, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட்.05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ஆர். ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் மணிகண்டன், பென்னாகரம் செல்வமணி, மற்றும் பாலக்கோடு பாலசுந்தரம் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 5, 2025
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் முக்கிய அறிவிப்பு

தருமபுரி ஆட்சியர் சதீஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தர்மபுரியை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அடையாள அட்டை எண்ணினை பதிவு செய்யாமலோ அல்லது இதுவரை தங்களின் குடும்ப நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் பெறப்படாமலோ இருந்தால் தர்மபுரி முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சென்று கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார். *உங்களுக்கு தெரிந்த முன்னாள் படை வீரர்களுக்கு பகிரவும்*
News August 5, 2025
தர்மபுரி மக்களே அரசு வேலையில் மோசடி! உஷார்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி நடைபெறும் சம்பவம் அதிகரித்துள்ளன. தேர்வு எழுதாமல் அரசு வேலை பெற முடியாது. இதுபோன்ற மோசடிகளில் உஷாரா இருங்க மக்களே. மேலும், இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் (1800 599 0050) மற்றும் <