News April 29, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Similar News

News December 25, 2025

2025-ல் OTT ஹிட் அடித்த படங்கள்

image

தற்போது அனைத்து படங்களும் ரிலீசாகி கொஞ்ச நாள்களிலேயே OTT-ல் வந்துவிடுகின்றன. இதில், நிறைய படங்கள், திரையரங்கில் தோல்வி அடைந்தாலும், OTT-ல் ஹிட் அடிக்கின்றன. அந்த வகையில் இந்தாண்டு OTT-ல் அதிக வரவேற்பை பெற்ற படங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

News December 24, 2025

BREAKING: விஜய்யுடன் கூட்டணி… முடிவை அறிவித்தார்

image

EPS இருக்கும்வரை அதிமுகவில் இணையப்போவதில்லை என நேற்று OPS தெரிவித்திருந்தார். இந்நிலையில் தவெகவுடன் OPS இணைவாரா என செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அவர் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என கூறியுள்ளார். இதன் மூலம் OPS-ஐ தவெக கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News December 24, 2025

கேல் ரத்னா விருதுக்கு ஹர்திக் பெயர் பரிந்துரை

image

ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங்கை, கேல் ரத்னா விருதுக்கு தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோல் தேஜஸ்வி ஷங்கர், பிரியங்கா, நரேந்திரா (பாக்ஸிங்), விதித் குஜராத்தி, திவ்யா தேஷ்முக் (செஸ்), தனுஷ் ஸ்ரீகாந்த் (Para Shooting), பிரனதி நாயக் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ராஜ்குமார் பால் (ஹாக்கி), சுர்ஜித் (கபடி), நிர்மலா பாட்டி (கோ கோ) மற்றும் பல வீரர்களை அர்ஜுனா விருதுக்கும் பரிந்துரைத்துள்ளது.

error: Content is protected !!