News April 29, 2025

பிரபல நடிகர் பிரகாஷ் பெண்டே காலமானார்!

image

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் மராத்தி சினிமாவில் மிக பிரபலமாக இருந்த பிரகாஷ் பெண்டே(82) காலமானார். அவர் பாலு, சாட்டக் சாந்த்னி, நடே ஜாட்லே டான் ஜீவ்னே போன்ற மாபெரும் மராத்தி வெற்றி படங்களை இயக்கி, நடித்தும் இருக்கிறார். சினிமா துறையை தாண்டி இவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. மும்பையிலுள்ள பல்வேறு கேலரிகளில் இவரின் ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டுள்ளன. #RIP.

Similar News

News November 8, 2025

இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை.. அறிவிப்பு வந்தது

image

சென்னையில் இன்று(நவ.8) பள்ளிகளுக்கு விடுமுறையாகும். முன்னதாக, மழை விடுமுறையை ஈடுசெய்ய இன்று பள்ளிகள் இயங்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடையே, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு முதலே பல இடங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கும் விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது.

News November 8, 2025

Cinema 360°: குற்றப்பரம்பரையில் ஹீரோவாக சசிகுமார்

image

*வெங்கட் பிரபு இயக்கிய ‘பார்ட்டி’ படம் 2026 பிப்ரவரி ரிலீஸிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. *சசிகுமார் ஹீரோவாக நடிக்கவுள்ள ‘குற்றப்பரம்பரை’ 3-4 வெப் சீரிஸாக உருவாகவுள்ளது. *சிம்பு, வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு நவ.24-ம் தேதி தொடங்குகிறது. *சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் ‘லெனின் பாண்டியன்’ புரமோ வெளியாகியுள்ளது. * அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ டிச.18-ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.

News November 8, 2025

₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது.. ரீவைண்ட்

image

₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது என PM அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகின்றன. கறுப்பு பணம் கணிசமாக குறையும், கள்ள நோட்டுகள் ஒழிக்கப்படுவதால் தீவிரவாதத்துக்கு துணை போகும் நடவடிக்கைகள் முடக்கம், நாட்டில் ஊழல் தடுப்பு என்று PM மோடி கூறியிருந்தார். ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் வளர்ச்சியை பெருமளவு பாதித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன.

error: Content is protected !!