News April 29, 2025
ஏன் பயப்படுறீங்க சசி தரூர்? விளாசிய காங். தலைவர்

மோடியை புகழும் சந்தர்ப்பத்திற்காக சசி தரூர் காத்துக்கிடக்கிறார் என காங். தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, அரசின் பாதுகாப்பு செயல்பாடுகளை காங். உள்பட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், காங். MP சசி தரூர் மோடி அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், ED, CBI, IT ஏஜென்சிகளை கண்டு சசி தரூர் பயப்படுகிறார் என உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 30, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 30 – சித்திரை- 20 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 11:30 AM ▶ திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை.
News April 30, 2025
ரெட்ரோ கதை இதுதான்.. வெளியான டுவிஸ்ட்

வன்முறைகளைக் கைவிடுவதாக சபதம் ஏற்ற ஒரு கேங்ஸ்டர், தனது குடும்பத்தைப் பாதுகாக்க சபதத்தை மீறி வன்முறையைக் கையிலெடுக்கிறார், இந்த தமிழ் படம் ரத்தக்களரி மிகுந்தது என ரெட்ரோ படம் குறித்து பிரிட்டிஷ் திரைப்பட வாரியம் UK ரிலீஸையொட்டி தெரிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் மே 1-ல் உலகெங்கும் வெளியாகவுள்ளது.
News April 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!