News April 29, 2025

தஞ்சை கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

தொழிலாளர் தினமான (மே.1) தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 25, 2025

தஞ்சை வேலை தேடும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

image

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 1/11/2025 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 3 மணி வரை பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. தகுதி உள்ள இளைஞர்கள் தகுந்த சான்றிதழ் உடன் முகாமில் பங்கு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News October 25, 2025

தஞ்சை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

தஞ்சை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT NOW..

News October 25, 2025

தஞ்சை: மர்மமான முறையில் மாணவர் இறப்பு!

image

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (20). என்ஜினீயரிங் மாணவரான இவர், தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை விஷ்ணு, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார், விஷ்ணுவின் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!