News April 5, 2024
நாமக்கல்: டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் வருகின்ற நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News May 7, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (01/05/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்சுமணதாஸ் (9443286911), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199) ,வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
News May 7, 2025
நாமக்கல் : முட்டை விலை 10 பைசா உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 1) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
News May 7, 2025
நாமக்கல்லில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட கோயில்

பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் இங்கு தங்கி இருந்து பெருமாளை தரிசித்ததால் இவ்வூர் பாண்டவர் மங்கலம் என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி பாண்டமங்கலம் ஆனது. இங்கு தை மாதத்தில் கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா துவங்கப்பட்டு 7 நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். புரட்டாசி மாதம் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. SHARE IT!