News April 29, 2025
PM கிஷான் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்க முடிவு!

மத்திய அரசின் ‘PM கிஷான்’ உதவித்தொகையின் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். 19-வது தவணை ₹2000 கடந்த பிப்.24-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்ட நிலையில், 20-வது தவணையை ஜூன் மாதம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 18-வது தவணை அக்டோபரிலும், 17-வது தவணை ஜூன் 2024லும் வழங்கப்பட்டது.
Similar News
News September 14, 2025
கவினுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி

பிரபல டான்ஸ் மாஸ்டர் சதீஷ், கவினை வைத்து ‘கிஸ்’ என்ற படத்தை எடுத்துள்ளார். கவினின் ‘டாடா’ படத்துக்கு கிடைத்த வெற்றி, ப்ளடி பெக்கருக்கு கிடைக்கவில்லை. இதனால் கிஸ் படத்தை வெற்றிப்படமாக மாற்றும் வேலையில் அவர் பிஸியாக பணியாற்றி வருகிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்துக்கு, விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.
News September 14, 2025
வெறுப்புகளை விஷமாக அருந்துகிறேன்: PM மோடி

2019-ல் அசாமை சேர்ந்த பாடகர் பூபன் ஹசாரிக்காவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதை காங்கிரஸ் விமர்சித்திருந்தது. இதற்கு PM மோடி பதிலடி கொடுத்துள்ளார். நான் சிவன் பக்தன் என்பதால், எனக்கு எதிராக வரும் வெறுப்பு பேச்சுகளை விஷம் போல் அருந்துவேன் எனக் குறிப்பிட்ட அவர், வேறு ஒருவரை அப்படி பேசினால் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என எச்சரித்திருந்தார்.
News September 14, 2025
BREAKING: கனமழை கொட்டித் தீர்க்கும்.. அலர்ட்

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 17-ல் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 20-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், கவனமாக இருங்க நண்பர்களே!