News April 29, 2025

7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD

image

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. வேலூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் மற்றும் காரைக்காலில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

Similar News

News April 30, 2025

ராசி பலன்கள் (30.04.2025)

image

➤மேஷம் – பயம் ➤ரிஷபம் – நன்மை ➤மிதுனம் – நற்செயல் ➤கடகம் – ஆதாயம் ➤சிம்மம் – சுகம் ➤கன்னி – எதிர்ப்பு ➤துலாம் – ஆக்கம் ➤விருச்சிகம் – பொறுமை ➤தனுசு – பேராசை ➤மகரம் – முயற்சி ➤கும்பம் – நட்பு ➤மீனம் – புகழ்.

News April 30, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவு?

image

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி 2024 குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என உத்தேச அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்.14-ல் நடைபெற்று, டிசம்பரில் முடிவுகள் வெளியாகின. மேலும், நடப்பாண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு ஜூலை 15-ல் வெளியாகி, செப்டம்பரில் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

News April 29, 2025

₹100, ₹200 நோட்டுகள் குறித்து RBI முக்கிய முடிவு!

image

ATMகளில் பணம் எடுக்கும் போது, தற்போது ₹100, ₹200 நோட்டுகள் பெரிதாக கிடைப்பதில்லை. இது பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. இதனால், இனி அனைத்து ATMகளிலும் ₹100, ₹200 இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. செப். மாதத்திற்குள் நாட்டில் 75% ATMகளிலும், மார்ச் 2026-க்குள் 90% ATMகளிலும் ₹100, ₹200 இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. உங்களுக்கு ATMகளில் ₹100, ₹200 கிடைக்குதா?

error: Content is protected !!