News April 29, 2025

மே தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே 1 தொழிலாளர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News September 3, 2025

செங்கோட்டையன் கலகக் குரலுக்கு பின்னணி பாஜகவா?

image

சசிகலா, டிடிவி, OPS போன்றோர் பிரிந்திருப்பது NDA கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கலாம் என பாஜக மதிப்பிடுகிறது. அதனால், அவர்களை உள்ளே இழுக்க நினைத்தாலும், அவர்களை சேர்ப்பதில்லை என EPS உறுதியாக உள்ளார். இந்நிலையில், கட்சிக்குள்ளேயே EPS-க்கு நெருக்கடி கொடுத்து பணிய வைக்கும் நோக்கிலேயே செங்கோட்டையன் குரல் எழுவதாகவும், இதன் பின்னணியில் பாஜக இருக்கலாம் எனவும் அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

News September 3, 2025

தங்கம் விலை மொத்தம் ₹4,000 உயர்வு

image

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை, இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய Record-ஐ படைத்துள்ளது. கடந்த 9 நாள்களில் ஒருநாள் கூட தங்கம் விலை குறையவில்லை. இதனால், கடந்த 25-ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் ₹4,000 அதிகரித்துள்ளது. இம்மாதத்தில் (ஆவணி) திருமணம் போன்ற சுபமுகூர்த்த நிகழ்வுகள் அதிகளவில் வருகிறது. இதனால், தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News September 3, 2025

டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி நகரும் ரிங்கு சிங்

image

IPL-ல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்குள் நுழைந்தவர் ரிங்கு சிங். இந்திய அணிக்கு சிறந்த பினிஷராகவும் சில போட்டிகளில் திகழ்ந்தார். அதிரடிதான் ரிங்குவின் பாணி என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தனக்கு டெஸ்டில் விளையாடுவதே கனவு என தெரிவித்துள்ளார். ரஞ்சியில் சிறப்பாக விளையாடிவரும் ரிங்கு, டெஸ்டில் வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!