News April 29, 2025
ஆட்டம் இன்னும் முடியல! CSK பிளே-ஆஃப் போக முடியும்!

இந்த வருஷம் எல்லாமே CSK-க்கு எதிரா இருக்கு. இதுவரை, 9 மேட்சில் 2-ல் மட்டுமே ஜெயிச்சிருக்காங்க. இனி எங்க பிளே-ஆப் போறது என நம்பிக்கை இழக்க வேண்டாம். யாரோ ஒரு முரட்டு CSK ஃபேனின் கால்குலேஷன் 2-வது படத்தில் பாருங்க. மீதி இருக்கும் 5 மேட்சும் CSK ஜெயிச்சு, மத்த டீம்ஸ், இதுல இருக்குற படி மத்த டீம்களின் மேட்ச் முடிஞ்சா போதும்! CSK பிளே-ஆப் போயிடலாம். இதெல்லாம் ஓகேதான். ஆனா CSK ஜெயிக்கணுமே?
Similar News
News September 4, 2025
விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு ‘நோ’: ஐஸ்வர்யா

விஜய்யே அழைத்தாலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரையில் நகைக்கடை விழாவில் பங்கேற்ற அவரிடம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவருக்கான வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தனக்கு அரசியலில் நாட்டம் இல்லை என்றார். அண்மையில் நடிகை அம்பிகா, தான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 4, 2025
தரையில் அமர்ந்து சாப்பிட்டா இவ்வளவு நன்மையா!

டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதை விட, தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல்நலத்துக்கு பல நன்மைகளை கொடுக்கும் என்கின்றனர் சித்தா டாக்டர்கள். தரையில் தட்டை வைத்து, குனிந்து உணவை எடுத்துச் சாப்பிடுகையில் ஜீரணம் எளிதாகிறது. தசை- உடல்வலிகள் நீங்குகின்றன. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதையும் உணர்கிறோம். தரையில் அமர்ந்து சாப்பிடுவது அமைதியையும் தருகிறது என்கின்றனர். நீங்க எப்படி சாப்பிடுகிறீர்கள்?
News September 4, 2025
அரசியலில் இருந்து விலகும் செங்கோட்டையன்?

செங்கோட்டையன் நாளை என்ன பேசப்போகிறார் என்பதுதான் அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. 9 முறை MLA, MGR, ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற தலைவர், 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் என செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை மிக நீண்டது. ஆனாலும், EPS உடனான அதிருப்தி காரணமாக மீண்டும் சசிகலா, டிடிவி, OPS இணைப்பு (அ) அரசியலில் இருந்து விலகல் என இந்த 2 முடிவில் ஏதேனும் ஒன்றையே அவர் எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.