News April 29, 2025
கூட்டணி கணக்கு.. அமித்ஷா – நயினார் சந்திப்பின் பின்னணி!

டெல்லி சென்றுள்ள TN பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், தேர்தலை திறம்பட எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், TN-ல் பாஜகவை வளர்ப்பது தொடர்பாக நயினாருக்கு பல்வேறு ஆலோசனைகளை அமித்ஷா வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News April 30, 2025
சென்னை வரும் அமித்ஷா.. பாஜகவுக்கு 40 சீட்?

சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தார். இந்நிலையில் மே 3-ல் மீண்டும் அவர் சென்னை வரவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் செயல்பாடு, தொகுதி பங்கீட்டில் 40 சீட் வரை அதிமுகவிடம் கேட்பது குறித்தும், திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
News April 30, 2025
ராசி பலன்கள் (30.04.2025)

➤மேஷம் – பயம் ➤ரிஷபம் – நன்மை ➤மிதுனம் – நற்செயல் ➤கடகம் – ஆதாயம் ➤சிம்மம் – சுகம் ➤கன்னி – எதிர்ப்பு ➤துலாம் – ஆக்கம் ➤விருச்சிகம் – பொறுமை ➤தனுசு – பேராசை ➤மகரம் – முயற்சி ➤கும்பம் – நட்பு ➤மீனம் – புகழ்.
News April 30, 2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவு?

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி 2024 குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என உத்தேச அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்.14-ல் நடைபெற்று, டிசம்பரில் முடிவுகள் வெளியாகின. மேலும், நடப்பாண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு ஜூலை 15-ல் வெளியாகி, செப்டம்பரில் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <