News April 29, 2025
கோவை-தன்பாத் ரெயில் இன்று தாமதமாக புறப்படுமென அறிவிப்பு

வாராந்திர கோவை-தன்பாத் சிறப்பு ரயில் (03680) இன்று (செவ்வாய்க்கிழமை) 8 மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக, கோவையில் இருந்து காலை 7.50 மணிக்கு பதிலாக மாலை 4.15 மணிக்கு புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இணைப்பு ரயில் தாமதம் காரணமாக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக தன்பாத் செல்கிறது.
Similar News
News April 29, 2025
சேலத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை!

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா கூறினார். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா? என உளவுப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் போலீஸ் சரகத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை. முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
சிறுவர் கொலை வழக்கு: தாய் பரபரப்பு வாக்குமூலம்!

வாழப்பாடியை,துக்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி இளவரசி. இவர்களது மகன்களான விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) ஆகிய இருவரும் நேற்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளார். இளவரசியை போலீசார் கைது செய்தனர்.
News April 29, 2025
Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும். சேலத்தில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.