News April 29, 2025
தூங்கா நகரத்தை நோக்கி விஜய்!

தவெகவின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கை மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இடம் பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. மே மாதம் பூத் கமிட்டி கருத்தரங்கம் அங்கு நடைபெற உள்ளது. கோவையில் கடந்த 26 மற்றும் 27-ம் தேதிகளில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 13, 2025
விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்: ராமதாஸ்

அன்புமணி – ராமதாஸ் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் பாமக இரண்டாக பிரிந்து இருக்கிறது. இதனால் தான் பாமக இதுவரை கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில், தந்தை – மகன் பிரச்னை கடந்த 10-ம் தேதியே முடிந்து விட்டதாக சற்றுமுன் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தீயவை கீழே போகும், நல்லவை மேலே போகும் எனக் கூறிய அவர், யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
UPI கட்டண வரம்புகள் விவரம்

தனிநபர்கள் நிறுவனங்களுக்கு UPI மூலம் பணம் செலுத்தும்(P2M) வரம்பு செப்.15 முதல் உயர்கிறது. அதன்படி, கிரெடிட் கார்டு பேமெண்ட்க்கு ஒரு பரிவர்த்தனைக்கு ₹5 லட்சம் (ஒரு நாளைக்கு ₹6 லட்சம்), பயணக் கட்டணம் -₹5 லட்சம், லோன் & EMI -₹5 லட்சம் (₹10 லட்சம்), முதலீடு & இன்ஷூரன்ஸ் -₹5 லட்சம் (₹10 லட்சம்), வரி -₹5 லட்சம், வங்கி சேவைகள் -₹5 லட்சம். எனினும், தனிநபர்களுக்கு அனுப்பும் வரம்பு ₹1 லட்சமாகவே தொடரும்.
News September 13, 2025
கதை விடாதீர்கள் MY DEAR CM சார்: விஜய்

மதுரை மாநாட்டில் CM ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு விஜய் பேசியது விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், அரியலூர் பரப்புரையில் அங்கிள் என்ற வார்த்தையை தவிர்த்த அவர், நையாண்டியாக சார் என ஸ்டாலினை குறிப்பிட்டார். மேலும், திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர், இதை பற்றி கேட்டால் கதை விடாதீர்கள் MY DEAR CM சார் எனவும் விஜய் கிண்டலாக பேசினார்.