News April 29, 2025

ராணிப்பேட்டை: குறைதீர் கூட்டத்தில் 403 மனுக்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (28.04.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 403 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெற்றனர். தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News August 13, 2025

பள்ளி வளாகத்தில் மது பிரியர்களின் அட்டகாசம்

image

ஆற்காட்டில் அமைந்துள்ள சரஸ்வதி தனகோட்டி ஆரம்பப்பள்ளி வாசலிலேயே சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்துவதும், அந்த மது பாட்டில்களை பள்ளி வளாக வாசலில் வீசி செல்கின்றனர். மேலும் அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரிதும் சிரமம் அடைகின்றனர். இதை துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

News August 13, 2025

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் தினமும் விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பாதசாரிகள் கவனமாக இருக்கவும், சீட் பெல்ட்டை பயன்படுத்தவும், போக்குவரத்து விதிகள்& விதிமுறைகளைப் பின்பற்றவும், தூக்கம் வந்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், ஹெல்மெட் அணியுங்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் போன்றவற்றை விளக்கும் வகையில் பதிவிட்டுள்ளது. இதை ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!

News August 13, 2025

ராணிப்பேட்டை கூட்டுறவு வங்கிகளில் வேலை!-APPLY NOW

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. ராணிப்பேட்டையில் 45 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் <>இந்த இணையதளத்தில்<<>> வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டையில் (04172-270050) கூட்டுறவு சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!