News April 29, 2025
பட்டு சேலையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே

பட்டு சேலைக்கு பெயர்போனது காஞ்சிபுரம் மாவட்டம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எவ்வளவு பிரபலமானது என்றால், ‘ரெட்ரோ’ படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே அண்மையில் காஞ்சிபுரம் சேலையை அணிந்து கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. மின்னும் காஞ்சிபுரம் பட்டு சேலையில், நடிகை பூஜா லட்சணமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு காஞ்சிபுரம் சேலை பிடிக்குமா?
Similar News
News October 22, 2025
காஞ்சிபுரம்: ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

காஞ்சிபுரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 22, 2025
காஞ்சிபுரம்:பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம், இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News October 22, 2025
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஆறு மணி நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044 – 27237107 மற்றும் 8056221077 ஆகிய எண்களை அறிவித்துள்ளார்.