News April 29, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும். நீலகிரியில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

Similar News

News August 13, 2025

ஆட்சியர் கூட்டரங்கில் சட்ட விழிப்புணர்வு முகாம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து தமிழக அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 13, 2025

நீலகிரி: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகளுக்கு வரவேற்பு

image

நீலகிரி: வாழைத் தோட்டம் GRG நினைவு மேல்நிலைப் பள்ளியில்  உதகை அரிமா சங்கம் சார்பில் விண்வெளி அறிவியல் தலைப்பில் விழிப்புணர்வு  நிகழ்ச்சி நேற்று(ஆக.12) நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ( இஸ்ரோ ) முன்னாள் விஞ்ஞானிகள் டாக்டர் சுரேந்திர பால் , டாக்டர் சுந்தரமூர்த்தி ,  டாக்டர் எச் .போஜராஜ் , டாக்டர் நகுலன் ஜோகி ஆகியோர்களை பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் வரவேற்றார்.

News August 13, 2025

நீலகிரி: டிகிரி வேண்டாம்.., உடனே அரசு வேலை! APPLY

image

நீலகிரி மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை(BRBNMPL) நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, Process assistant பணிக்கு ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 வரை அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க.<<>> SHARE IT

error: Content is protected !!