News April 29, 2025
241 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் : ஆட்சியா் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் மே.1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள், அந்தந்த ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விவரங்களை விவாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதி மக்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க..
Similar News
News November 6, 2025
மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சி பெற்ற தரங்கம்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அங்கு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருந்து இருப்புகள் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
News November 6, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை அளவு விவரம்

வெப்பசலனம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 26 மிமீ மழை பதிவாகியுள்ளது. செம்பனார்கோயிலில் 9.20 மிமீ மழை பெய்துள்ளது. கொள்ளிடத்தில் 1.20 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
மயிலாடுதுறை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


