News April 29, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். ஈரோட்டில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

Similar News

News October 29, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், டெலிகிராம் வழியாக வரும் பகுதி நேர வேலைக்கான குறுஞ்செய்திகள் மற்றும் இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்த மோசடிகளில், பணம் சம்பாதிப்பதாகக் கூறி, ஆரம்பத்தில் சிறிய தொகைகளை செலுத்துமாறு கேட்பார்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருடுவார்கள். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இலவச எண். 1930 தொடர் கொள்ளலாம் என காவல்துறை அறிவிப்பு!

News October 29, 2025

கவுந்தப்பாடி அருகே கடனால் நேர்ந்த சோகம்

image

கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனியார் பைனான்சில் 2017-ம் ஆண்டு ரூ.8 லட்சம் கடன் பெற்றுள்ளார். மாத தவணையாக ரூ.8,000 கட்டி வந்துள்ளார். கோவிட் காலத்தில் சரிவர வேலை இல்லாததால் கடன் தொகையை கட்ட முடியாமல் சிக்கி தவித்துள்ளார். அதன் காரணமாக கடனை அடைக்க முடியாமல் புலம்பி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News October 29, 2025

நம்பியூர் அருகே சிறுமிக்கு டார்ச்சர்!

image

நம்பியூர் அடுத்த பெரியபீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் அப்குதியை சேர்ந்த சிறுமியை கடந்த 1 வருடமாக காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று விக்னேஷ் மீண்டும் சிறுமியின் வீட்டுக்கு மதுபோதையில் சென்று தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். அவரது பெற்றோர் அளித்த புகாரின்படி விக்னேஷை கைது செய்தனர்.

error: Content is protected !!