News April 29, 2025
கரடியார்: குழந்தை திருமணம் மூவர் மீது வழக்கு

கரடியாரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 2024ஆம் ஆண்டு குழந்தை திருமணம் நடைபெற்றது. தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த போது அவர் 18 வயது பூர்த்தி அடையவில்லை என மருத்துவர்கள் கண்டறிந்தனர். தகவலின் அடிப்படையில் குழந்தை திருமணம் செய்த கலர்புரத்தை சேர்ந்த மணிகண்டன் அவரது சகோதரர் முருகேசன், அவரது மனைவி அலமேலு ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
திருக்கோவிலூர் வருகை தரும் அமைச்சர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பு அருகில் நாளை (26-08-2025) மாலை 5 மணியளவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட சார்பில் மு.எம்.பி பொன்.கௌதம் சிகாமணி தலைமையில் அண்ணா அறிவகம் (District பிரிவால்) அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சரும் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான க.பொன்முடி கலந்து கொள்ள உள்ளார்.
News August 25, 2025
கள்ளக்குறிச்சி: விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாகவும், தனிநபர் தங்கள் குறைகள் குறித்தும் மனுக்கள் அளித்து பயன்படலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
கள்ளக்குறிச்சி மக்களே இந்த நம்பர் உங்க கிட்ட இருக்கா?

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511471>>தொடர்ச்சி<<>>